206
தமிழகத்தின் சென்னையை சேர்ந்த மூன்று வயதான சிறுமி சஞ்சனா மூன்றரை மணித்தியாலத்தில் ஆயிரத்து 111 அம்புகளை எய்தி உலக சாதனைக்கு முயன்று மூலம் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
வில்வித்தையில் ஆர்வம் கொண்ட சிறுமி சஞ்சனா தனது 3 வயதிலேயே கின்னஸ் சாதனைக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சென்னை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பிரேம்நாத் என்பவரின் மகளான சஞ்சனா பிரபல கராத்தே வீரரும், வில் வித்தை பயிற்சி அளித்து வருபவருமான ஷிஹான் ஹுசேனியிடம் பயிற்சி பெற்று வருகின்றார்.
இச் சிறுமி ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதை வாழ்வின் இலட்சியமாக கொண்டுள்ளார். சமீபத்தில் சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி கலைக் கல்லூரியில் இவரது கின்னஸ் சாதனை முயற்சி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. 3 வயது சிறுமியான சஞ்சனா சுமார் 3 மணித்தியாலத்தில் ஆயிரத்து 111 அம்புகளை எய்து தனது வயதை கடந்த இலக்கை எட்டி பாராட்டையும் கவனத்தையும் பெற்றுள்ளார்.
இந்த முயற்சியின்போது தனக்கு எந்திவதமான கஷ்டங்களும் இல்லை சிறுமி சஞ்சனா புன்னகையுடன் தெரிவித்துள்ளார். இச் சிறுமியை ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வைப்பதே தங்களது இலட்சியம் என அவரது பெற்றோர்கள் கூறுகின்றனர்.
சஞ்சனா எய்த அம்புகள் மிகச்சரியாக இலக்கை எட்டியதுபோல், வெகுவிரைவில் தமிழக வீராங்கனையாக இவர் தனது இலக்கை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறார்.
Spread the love