மன்னார் மாவட்டத்தின் கல்விக்கான தனது சேவையினை ஆற்றிவரும் துரையம்மா அன்பகத்தின் 10 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தெரிவு செய்யப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 16 குடும்பங்களுக்கு பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் நேற்று(19) ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கள்ளியடி கத்தாளம்பிட்டி கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளி மாணவர்களின் 16 குடும்பங்களுக்கு குறித்த பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் கள்ளியடி கத்தாளம்பிட்டி கிராமசேவகர் பிரிவில் உள்ள மாதர் சங்க உறுப்பினர்கள் உட்பட தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். தற்போதைய வாழ்க்கைச் சூழலில் பொருளாதாரப் பிரச்சினையினால் கல்வியை தொடர முடியாத நிலையில் நிறைய மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றார்கள்.
அவ்வாறில்லாமல் கல்விச் செயற்பாட்டை சேவையாக ஆற்றிவரும் துரையம்மா அன்பகத்தினர் ஸ்தாபகர் எஸ்.உதயன் மறைந்த நிலையில் குறித்த கிராமத்தின் மாணவர்களின் நலனில் அக்கறையுடன் தொடர்ந்து தமது சேவையை செயலாற்ற அன்பகத்தின் பிரதி நிதிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.