கிரேக்க நாட்டில் ஏற்பட்ட கடன் பிரச்சனை மற்றும் அதன் தாக்கத்தை சமாளிக்க வடிவமைக்கப்பட்ட யூரோ வலய திட்டத்தில், மூன்றாண்டு காலத்தை கிரீஸ் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் நிதிச் சந்தைகளில் இருந்து கடனாக நிதியை பெற கிரேக்கத்துக்கு காணப்பட்ட தடையானது முதன்முறையாக தற்போது நீக்கப்பட்டள்ளது.
கடந்த மூன்று வருடங்களாக கிரேக்கத்துக்கு அதன் நிதி பிரச்சனையை சமாளிக்க, ஐரோப்பிய நிதி ஸ்திரத்தன்மை அமைப்பு 61.9 பில்லியன் யூரோ நிதியை வழங்கியிருந்தது. இதுவே உலக அளவில் ஒரு நாட்டுக்கு அதன் கடன் மற்றும் நிதி பிரச்சனையை சமாளிக்க வழங்கப்பட்ட அதிகபட்ச நிதியாகும்.
கிரேக்கத்தின் சரிவடைந்த பொருளாதாரத்தை புனரமைக்கவும், வங்கிகளின் மூலதனத்தை மறு சீரமைக்கவும் அந்நாட்டு அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு இந்த திட்டம் மிகவும் உறுதுணையாக இருந்தது.
கடந்த 2014-15 காலப்பகுதியில் கிரேக்கத்தில் வங்கிகள் நிதி பற்றாக்குறையால் அவசர கால நிதியை நீ;டிக்க முடியாது என்ற ஐரோப்பிய மத்திய வங்கியின் முடிவையடுத்து, அந்நாட்டு வங்கிகள் பல மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.