அறவிடமுடியாக் கடன்களை கட்டுப்படுத்துவது பற்றி குழுவின் உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனரான ரகுராம் ராஜனுக்கு நாடாளுமன்ற குழு அழைப்பு விடுத்துள்ளது. நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் அறவிடமுடியாக் கடன் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்ற நிலையில் இதனை சமாளிக்க முடியாமல் வங்கிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன.
இந்த நிலையில் அறவிடமுடியாக் கடன்களை இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனரான ரகுராம் ராஜன் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டது பற்றி எடுத்துக் கூறப்பட்டதுடன் அவரை அழைத்து இதுபற்றி ஆலோசனைகளை கேட்டுப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து தற்போது அமெரிக்காவில் பேராசிரியராக பணியாற்றி வரும் ரகுராம் ராஜனை நாடாளுமன்ற மதிப்பீடுகள் குழு கூட்டத்தில் பங்கேற்று அறவிடமுடியாக் கடன்களை கட்டுப்படுத்துவது பற்றி குழுவின் உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.