கேரளாவை புரட்டிப்போட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவை கடுமையான இயற்கை பேரிடர் என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் கடந்த 8-ம் திகதி ஆரம்பித்த மழையால் அம்மாநிலம் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. 10 நாட்களாக பெய்த கனமழையால் சுமார் 350-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது மழை நின்று வெள்ள நீர் வடியத்தொடங்கியுள்ளனால், நிவாரணப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவை உலுக்கிய இந்த மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள அரசு மற்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியிருந்தன.
இந்நிலையில், கடந்த 16-ம் திகதி மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி மாநிலங்களவை செயலகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கேரள மழை வெள்ளத்தினை ‘கடுமையான இயற்கை பேரிடர்’ என குறிப்பிட்டுள்ளார்.