பிரித்தானிய நாட்டு எல்லைக்குள் இருக்கும் நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு சி.பி.ஐ. சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
அத்துடன் தலைமறைவாக இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தாரை கைது செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் பிணையில்விட முடியாத கைது உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தநிலையில் நிரவ் இன்னும் பிரித்தானிய நாட்டு எல்லைக்குள் இருப்பதாக அந்நாட்டின் சார்பில் அண்மையில் தெரிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து ; அவரை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்னும் அழைப்பாணையை சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.
வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமாக இந்த உத்தரவு விரைவில் பிரித்தானிய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது