யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் வீதியில் உள்ள வைத்தியர் வீடு இலக்கு தவறி தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல் நடத்திய குழுவின் இலக்கு வைத்தியரின் வீட்டுக்கு அருகில் உள்ள வாள்வெட்டுச் சந்தேகநபர் ஒருவரின் வீடாகும் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் எனவும் யாழ்ப்பாணம் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொக்குவில் சம்பியன் வீதியில் உள்ள தனது வீட்டுக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்த கும்பல் தம்மை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டதாகவும், தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் இமானுவேல் சாந்தகுமார், யாழ்ப்பாணம் காதவல் நிலையத்தில் நேற்றிரவு முறைப்பாடு செய்திருந்தார். அத்துடன், வைத்தியருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலைக் கண்டித்தும் குற்றவாளிகளை நீதியின் முன் முற்படுத்த வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையகப் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த ஆரம்ப விசாரணைகளிள், யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் வீதியில் வைத்தியர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முகப்புத் தோற்றளவில் வைத்தியரின் வீடும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த வீடும் ஒரே மாதிரியானவை. அத்துடன் தாக்குதலுக்கு இலக்கு வைத்த வீடு, கடந்த மாத இறுதியில் கொக்குவிலில் இடம்பெற்ற வாள்வெட்டுக் குழுவின் அடாவடிகளை அடுத்து காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருடையது.
அந்த வகையில் ஆவா குழுவுக்கும் அதற்கு எதிரான குழுவுக்கும் இடையிலான மோதலின் தொடர்ச்சியே இலக்குத் தவறிய வைத்தியர் வீட்டின் மீதான தாக்குதல் என தெரிவிக்கப்பட்டள்ளது.
“யாழில்.வன்முறைகளை கட்டுப்படுத்தி விட்டோம்” – வைத்தியர் வீட்டில் புகுந்த வாள்வெட்டுக்குழு அட்டகாசம்…
1 comment
என்ன Global Tamil நல்ல ஒரு வர்ணனையான தலையங்கம் எல்லாம் இட்டு இந்த காட்டுமிராண்டித்தனங்களை தட்டிக்கொடுக்கிறிங்கள் போல…
என்ன ஒரு சமுதாயப் பொறுப்பு ஐயா உங்களுக்கு…