182
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாஜக பிரமுகர் ஒருவர் அவரது வீட்டில் வைத்து தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் வசித்து வந்த ஷபிர் அகமது பட் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். பாஜக பிரமுகரான இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வேளை இன்று அதிகாலை வேளையில் இவரது வீட்டுக்குள் நுழைந்த தீவிரவாதிகள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ஷபிர் அகமதுவின் உடலை மீட்டதுடன் சம்பவம் பற்றி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love