வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வந்த நிவாரண பொருட்கள் மீது சுங்க வரி மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யை ரத்து செய்வது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி 500 கோடி ரூபாயும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 100 கோடி ரூபாய் நிதி உதவியும்அறிவித்திருந்தனர். இந்த 600 கோடி ரூபாய் நிதியை கேரள அரசுக்கு நேற்று மத்திய அரசு விடுவித்துள்ளதாக மத்திய அரசின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வந்த நிவாரண பொருட்கள் மீது சுங்க வரி மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யை ரத்து செய்வது என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுபோல், திருச்சூர், பாலக்காடு, கொச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள 3 சுங்கச்சாவடிகளில் 26ம் வரை, கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது எனவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.