இந்திய இழுவைப் படகு விவகாரம் இந்தியாவை பகைக்க முடியாது என கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் துறை அமைச்சர் விஜித் விஜயமுணி சொய்சா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் துறை அமைச்சர் விஜித் விஜயமுணி சொய்சா யாழ். மாவட்ட கடற்றொழில் சங்கத்தினரை நேற்று (21.08.18) இரவு யாழ். ரில்கோ சிற்றி ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலின் போது யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்கத்தினர் தமது பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சருக்கு மகஜர் ஒன்றையும் கையளித்ததுடன், தமது தேவைகள் தொடர்பாகவும் எடுத்து கூறினார்கள்.
கடற்றொழிலாளர் சங்கத்தினரின் கோரிக்கைகளை செவி மடுத்து, அவற்றுக்கு பதிலளித்த அமைச்சர், இந்த வருடத்தில் 17 இந்திய மீனவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 87 படகுகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா இலங்கைக்கு சமீபமாக இருக்கக்கூடிய ஒரு நாடு. வரலாற்று ரீதியாக இலங்கையுடன் பல தொடர்புகளைக் கொண்டுள்ள ஒரு அயல்நாடு. இந்தியாவில் இருந்தே புத்த சமயம் இலங்கைக்கு வந்தது. இந்து மதமும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மத வழிபாடுகளை இங்கு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நீண்டகால தொடர்புகள் இருப்பதனால், மீனவர்களின் பிரச்சினைகளைத் தொடர்புபடுத்தி இந்தப் பிரச்சினைகளை திசை திருப்ப முயற்சிக்க கூடாது. இந்திய அரசாங்கத்துடனும், இந்த மீனவ அமைப்புக்களுடனும் சுமூகமான பேச்சுக்களை நடாத்தப்படும். அத்துமீறும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒரு இணக்கப்பாட்டினை ஏற்படுத்தி நல்லிணக்கத்தினை உருவாக்க வேண்டுமென்பதே இலங்கையின் நோக்கம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.