218
யுத்தம் காரணமாக செயலிழந்த நிலையில் புனரமைக்கப்பட்டுவந்த மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்றையதினம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மீன்பிடித்துறையில் 30 வீத பங்களிப்பை செலுத்திவந்த, மயிலிட்டி துறைமுகமானது கடந்த கால யுத்தம் காரணமாக செயலிழந்து காணப்பட்டநிலையில், 2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தினூடாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 27 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளடக்கப்பட்டிருந்த மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம், கடந்த 2017ஆம் ஆண்டே விடுவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love