186
இந்தோனேசியாவில் நடைபெற்று வருகின்ற ஆசிய விளையாட்டு போட்டியில் ஹொக்கிப் போட்டியில் ஹொங் கொங்கை வீழ்த்தி இந்திய அணி 86 வருட சாதனையை முறியடித்துள்ளது. ஆண்களுக்கான ஹொக்கி போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா – ஹொங் கொங் அணிகள் போட்டியிட்ட நிலையில் இந்தியா 26-0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியுள்ளது.
இதற்கு முன் 1932-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் அமெரிக்காவை 24-1 என வீழ்த்தியிருந்தமைதான் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. தற்போது 86 ஆண்டுகள் கழித்து இந்தியா அதிக கோல்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளது.
Spread the love