உலகம் முழுவதும் விற்பனையாகும் மருந்துகளில் 10 வீதமானவை போலி மருந்துகள் என சர்வதேச சுகாதார நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் போலி மருந்துகள் விற்பனை அதிகரித்து இருப்பதாகவும் குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி என்ற பெயரில் அதிக அளவில் போலி மருந்துகளை விற்பதாகவும் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொத்த போலி மருந்துகளில் 50 சதவீதமானவை நோய் எதிர்ப்பு மருந்துகள்தான என தெரிய வந்துள்ளதாகவும் இத்துடன் சத்து மருந்துகள் என்ற பெயரிலும், அதிக அளவில் போலி மருந்துகள் விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் உரிய தரம் இல்லாமலும் ஏராளமான மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம் சட்டப்பூர்வமற்ற மருந்துகளும் அதிக அளவில் விற்பனையாவதாகவும் கவலை வெளியிட்டுள்ளது