இந்தோனேசியாவில் நடைபெற்றுவரும் 18வது ஆசிய விளையாட்டுப்போட்டியில் ஜப்பான் நீச்சல் வீராங்கனையான ரிகாகோ இகீ 9Rikako Ikee) நீச்சல் போட்டியில் 6 தங்கம் வென்ற முதல் நபர் என்ற சாதனையை படைத்துள்ளார். 18 வயதான ரிகாகோ இகீ, 50 மீட்டர், 100 மீட்டர் பட்டர்பிளை, 50 மீட்டர், 100 மீட்டர் பிரீஸ்டைல், 4 x 100 மீட்டர் மெட்லே தொடர் நீச்சல், 4x 100 மீட்டர் பிரிஸ்டைல் தொடர் நீச்சல் என 6 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
இதன் மூலம் ஒரு ஆசிய விளையாட்டில் நீச்சலில் 6 தங்கம் வென்ற முதல் நபர் என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார்.
வடகொரிய துப்பாக்கி சுடுதல் வீரர் சோ ஜின்-மான் 1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் 7 தங்கம் வென்றிருந்தமையே இதுவரை ஒரு ஆசிய விளையாட்டுப் போட்டியில் அதிக தங்கம் வென்ற சாதனையாக காணப்படுகின்றது.
நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீச்சலில் மட்டும் ஜப்பான் 19 தங்கம் உள்பட 52 பதக்கம் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.