வட மாகாணத்தில் பல்வேறுபட்ட அபிவிருத்திகள் இடம்பெற்ற போதிலும் மக்களுடைய வாழ்வாதாரம் முன்னேற்றமடைய முடியாத நிலையே காணப்படுகின்றதென வட மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இளைஞர் அலுவல்கள் கருத்திட்ட முகாமைத்துவ பிரிவு இளைஞர் அலுவல்கள், கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் விற்பனை கண்காட்சி யாழ். சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றபோது குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தின் பின்பு பல்வேறுபட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தாலும்கூட முக்கிய குறைபாடாக மக்களுடைய வாழ்வாதார நிலமை முன்னேறாத நிலை காணப்படுகின்றது எனவும் குறிப்பாக மக்களின் வருமானம் தேசிய மட்டதிலும் பார்க்க குறைவாகவே உள்ளது என புள்ளி விபரங்கள் கூறுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய கண்காட்சியைப் பார்க்கின்ற போது பல முயற்சியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களில் உள்ள ஈடுபாடு சமூகத்தின் பால் உள்ள அக்கறை போன்றவற்றைப் பார்க்கின்றபோது மகிழ்ச்சி ஏற்படுத்துகின்றது. திருப்தி கரமாக ஒரு வங்கிக் கணக்கை வைத்திருப்பதைவிட அந்த சேமிப்பை தன்னுடைய சமூகத்திற்கான முதலீடாக மாற்றி அதற்கான சவால்களை சந்தித்து தான் சார்ந்த சமூககத்தவர்களுக்கான வேலை வாய்ப்பினை உருவாக்குவதற்கான முயற்சியாளர்களை பாரட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந் காலங்களுடன் ஒப்பிடுகின்றபோது பலவகையான உற்பத்திகள் காணப்படுகின்றது எனவும வடக்கைப் பொறுத்த வரையில் புலம் பெயர்ந்த சந்தை ஒன்று உள்ளது. அதற்கேற்பவே உற்பத்திப் பொருட்களை உற்பத்தியாக்குகின்ற போது வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்கின்ற போது அதற்கான பொருளாதாரம் அதிகரிக்கக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கத்தை பொறுத்த வரையில் இந்தக் காலப்பகுதியில் பல்வேறு வகையான நலத்திட்டங்களை செய்து வருகின்றது. தனையும் அவதானத்துடன் செய்து பல வழிகளிலும் முயற்சிகளை அடைய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.