187
ஊடகவியலாளர் உதயராசா சாளின் கடந்த 22-08-2018 அன்று கொழும்பிலுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் அழைத்து விசாணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கடந்த யூன் மாதம் 29 ஆம் திகதி ஆறுகால்மடம் பகுதியிலுள்ள கண்ணகி அம்மன் ஆலய திருவிழா அலங்காரத்தின்போது வடிவமைக்கப்பட்ட உருவம் ஒன்று தமிழர் தாயக வடிவத்தில் இருந்தமையை முகநூலிலும் வேறு ஊடகங்களிலும் பிரசுரித்தமைக்காகவே அவர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் ஆலயமொன்றில் நடைபெற்ற நிகழ்வை பிரசுரித்தமைக்காக சாளின் அவர்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு உள்ளாக்கியுள்ளமை ஊடக சுதந்திரத்தை நசுக்கும் செய்பாடாகும்.
ராஜபக்ச அரசின் காலப்பகுதியில் இடம்பெற்றது போன்று நல்லாட்சி வேடமிட்டு ஆட்சியேறியுள்ள ரணில் மைத்திரி அரசும் தொடர்ந்தும் ஊடக அடக்குமுறையை மேற்கொண்டுவருகின்றது. இச் சம்பவத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
Spread the love