தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு கட்சியின் தலைவருக்காக நடத்தப்படும் தேர்தலில் மு.க ஸ்டாலினை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தலைவராகிறார்.
தி.மு.க தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக மரணமடைந்தார். கடந்த 50 வருடமாக அவர் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது அவரது தி.மு.க தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதைனையடுத்து, இன்று அந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று நடைபெற்றது. மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், காலை மு.க ஸ்டாலின் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால், திமுக தலைவராக மு.க ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகிறார். நாளை மறுநாள் ( 28.08.18) அதிகாரப்பூர்வமாக பொதுக்குழுவில் அறிவிக்கப்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தி.மு.க.வின் இரண்டாவது தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.