இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் வேகப்பந்து வீச்சாளருமான லசித் மலிங்க இம்மாதம் நடைபெறவுள்ள ஆசிய கிண்ணப்போட்டிகளில் இலங்கை அணியில் இடம்பெறுவார் என தெரிவுக்குழுவின் தலைவர் கிரஹாம் லபரோய் தெரிவித்துள்ளார்.
மலிங்க ஒரு கட்டத்தில் 50 ஓவர் போட்டிகளில் விளையாட தயாராகயிருக்கவில்லை என்பதனால் தாங்கள் வேறு சில வேகப்பந்து வீச்சாளர்களில் கவனம் செலுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். உலககிண்ணப்போட்டிகளில் விளையாடக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக கவனம் செலுத்தியதனால் மலிங்கவிற்கு ஓய்வு வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் மலிங்கவின் உடல்தகுதி நல்ல நிலையில் இருந்தால் அவரை ஆசிய கிண்ண அணியில் இணைத்துக்கொள்வோம் எனவும் லபரோய் தெரிவித்துள்ளார்.