Home இலங்கை காவற்துறையின் செயற்பாடுகள் பலவீனமாக உள்ளனவா? விசேட விசாரணை….

காவற்துறையின் செயற்பாடுகள் பலவீனமாக உள்ளனவா? விசேட விசாரணை….

by admin


காவற்துறையின் செயற்பாடுகள் பலவீனமாக உள்ளன என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சர் சரத் பொன்சேகா, காவற்துறையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றார். இந்நிலையிலேயே, மேற்படி கூற்றுத் தொடர்பில், விசேட விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக முகாமைத்துவ மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

காவற்துறையினர், கடந்த காலங்களில் பொது மக்களின் நம்பிக்கையை வெற்றி கொண்டுள்ளனர். குறிப்பாக போதைப்பொருள் தடுப்புச் செயற்பாடுகளை துல்லியமாக மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவித்துள்ள அவர், காவற்துறையின் முயற்சியால் பல வன்முறைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தவறான செயற்பாடுகளில் ஈடுபடும் காவற்துறையினர் சிலரும் உள்ளனர். எனவே, அமைச்சர் சரத் பொன்சேகா, காவற்துறை தொடர்பில் வெளியிட்டுள்ள அதிருப்தி தொடர்பிலும் விசேட விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More