இரண்டாம் உலக போரில் போடப்பட்ட இரண்டு குண்டுகள் ஜெர்மன் நகரம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. அங்கு கட்டிட பணி ஒன்றுக்காக குழி தோண்டிய போது, இந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுமார் ஆறு மணி நேரம் குறித்த பகுதியை சுற்றி மூன்று கிலோ மீற்றர் பகுதியில் வசித்த 18,500 பேர் வெளியேற்றப்பட்டு அந்த குண்டுகளை செயலிழக்க செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஜெர்மனியில் உள்ள லுட்விக்ஷ்பன் என்னும் பகுதியில் கட்டிட பணியாளர்களால் கண்டெடுக்கப்பட்ட மேற்படி குண்டுகள் 500 கிலோகிராம் எடை கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவால் போடப்பட்ட குண்டுகளாக இருக்கலாம் என கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது