148
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவின் விருந்தாளி அல்ல என இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அடுத்த சில வாரங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவின் டில்லியை அடைய உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. “விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டு மக்களையும், இந்திய மக்களையும் காப்பாற்றிய மஹிந்த ராஜபக்ஷவுக்கும், மக்களின் விடுதலைக்காக போராடிய நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கிய பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” என்று சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Spread the love