தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையகம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. அடுத்தவருடம் ஏப்ரல்மே மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், நாடு முழுவதும் எத்தனை கட்டங்களாக வாக்குப்பதிவினை நடத்துவது என்பது தொடர்பில் தலைமை தேர்தல் ஆணையகம் ஆய்வு செய்து வருகிறது.
பாராளுமன்றத் தேர்தலில் பெண்களின் பங்களிப்பு பிரசார செலவை குறைத்து உச்சவரம்பை நிர்ணயம் செய்வது உட்பட பல்வேறு வியங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வர தலைமை தேர்தல் ஆணையகம் திட்டமிட்டுள்ள நிலையில் இது தொடர்பில் அரசியல் கட்சிகளின் கருத்துக்களை பெறும் நோக்குடனேயே மேற்படி ஆலோசனை நடைபெறவுள்ளது.
இன்று டெல்லியில் நடைபெற்றவுள்ள இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகளும், 51 மாநில கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.