பாகிஸ்தான் விமான நிலையங்களில் முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்படும் அரச மரியாதை ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டின் புதிய இம்ரான்கான் தெரிவித்துள்ளார். இம்ரான் கான் பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆடம்பர பிரதமர் பங்களா தேவையில்லை எனத் தெரிவித்துள்ளதுடன் சாதாரண வீட்டில் தங்கியுள்ளதுடன் 2 பணியாளர்களை மட்டுமே உதவிக்கு வைத்துள்ளார்.
ஆளுனர் மாளிகைகளில் ஆடம்பர வசதி கூடாது என உத்தரவிட்டுள்ளதுடன் ஜனாதிபதி, பிரதமர், ராணுவ தலைமை தளபதி மற்றும் அரசு அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்வதற்கும் தடை விதித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்றையதினம் விமான நிலையங்களில் அரசியல் வாதிகள் நீதிபதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு அரசினால் வழங்கப்படும் மரியாதையை ரத்து செய்வதாகவும் மீறி சிறப்பு மரியாதை வழங்கினால் விமான நிலைய குடியுரிமை அதிகாரி மற்றும் பொறுப்பு அதிகாரி பதவிவிலக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.