188
கிளிநொச்சி ஊரியான் பகுதியில் உழவியந்திரம் தடம்புரண்டதில் ஊரியான் பகுதியை சேர்ந்த 23 வயதான ரமேஸ்குமார் சியாந் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார் இன்று காலை 8.30 மணியளவில் உழவு இயந்திரத்தில் மண் ஏற்றிக் கொண்டு ஆறு ஒன்றில் இறங்கி ஏறிய போது தடம் புரண்டதில் உழவு இயந்திர சாரதியான இந்த இளைஞன் உயிரிழந்துள்ளார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதித்த போதும் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளதாக அறிய முடிகிறது
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
Spread the love