196
ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகனும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா விபத்தில் உயிரிழந்துள்ளார். நலகொண்டா மாவட்டத்தில் உள்ள நர்கெட்பள்ளி – அட்டன்கி நெடுஞ்சாலையில் சென்ற போது, ஹரிகிருஷ்ணாவின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், படுகாயம் அடைந்துள்ள ஹரிகிருஷ்ணா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஹரிகிருஷ்ணா பணியாற்றியுள்ளார்.
Spread the love