வெறும் 13 ஆயிரம் கோடியை ஒழிப்பதற்காகவா இந்த பணமதிப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் தாள்களை எண்ணும் பணி முடிந்துள்ளதாகவும் விநியோகிக்கப்பட்ட 1000 500 ரூபாய் தாள்களில் 15 லட்சத்து 41 கோடி ரூபாயில்,.15, 310,73 கோடி வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் 10,720 கோடி பணம் வரவில்லை எனவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
இது தொடர்பிலேயே ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வெறும் 13 ஆயிரம் கோடியை ஒழிக்கவா நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரையும் இழந்து, பல நிறுவனங்களையும் மூட மத்திய அரசு பண மதிப்பிழப்பை அறிவித்தது.
இந்த 13 ஆயிரம் கோடி பணம் கூட நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளில் இருக்கலாம், சிறிது பணம் தொலைந்தோ, அழிக்கப்பட்டோ இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பணமதிப்பு நீக்கத்தினால் இந்திய பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீதத்தை இழந்துள்ளது எனவும் இதனால் மட்டும் 2.25 லட்சம் கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.