நேவி சம்பத் என்றழைக்கப்படும், கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆராச்சி என்பவரை, வெளிநாட்டுக்கு தப்பிச்செல்வதற்கு உதவி செய்தார் எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாதுகாப்பு பணியாளர்களின் பிரதானி, அட்மிரல் ரவிந்திர விஜயகுணவர்தனவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக, குற்றப்புலனாய்வு பிரிவு (CID), நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், போதிய ஆதாரங்கள் இருப்பின் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்னவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று(புதன்கிழமை) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2007, 2008 ஆம் ஆண்டுகளில் கொழும்பையும் அதனை அண்மித்த பகுதிகளிலிருந்தும், மூவினத்தையும் சேர்ந்த இளைஞர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிடியாணை பிறப்பிக்கப்பட்டு மறைந்திருந்த நேவி சம்பத் என அழைக்கப்படும் லெப்டினன்ட் கொமான்டர் ப்ரஸாத் சந்தன ஹெட்டியாராய்ச்சி அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்காக மறைந்திருப்பதற்கு பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன, பண பரிமாற்றம் உள்ளிட்ட உதவிகளைப் புரிந்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரங்கள் இருப்பின் அவரை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதுள்ளது.