ஆசிய போட்டியில் பங்கேற்க இந்தோனோசியா சென்றிருந்த ஜப்பான் கூடைப்பந்து வீரர்கள் 4 பேருக்கு ஒழுக்கவிதிகளை மீறியமை தொடர்பாக ஒரு வருடத்தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் கூடைப்பந்து வீரர்களான ஹசி மோட்டா, கெய்டா இமாமுரா, நகாயோஷி, தகுமோ சாட்டோ ஆகியோருக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒழுக்கவிதிகளை மீறி ஜகர்தாவில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது அருந்தியதுடன், பெண்களை விடுதிக்கு அழைத்துச் சென்றதாக அவர்கள் மீது குற்றளம் சுமத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் விசாரணை நடத்திய ஜப்பான் கூடைப்பந்து சம்மேளனம் 4 பேருக்கும் தலா ஒரு வருடத் தடை விதித்துள்ளதுடன் 3 மாதங்களுக்கு அவர்களது சம்பளத்தில் 10 சமவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது