185
நியூயோர்க்கில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் பிரித்தானிய வீரர் அன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். இரண்டாவது சுற்று போட்டியின் போது ஸ்பெயின் நாட்டின் பெர்னாண்டோ வெர்டஸ்கோவுடன் போட்டியிட்ட முர்ரே7-5, 2-6, 6-4. 6-4 என்ற கணக்கில் தோல்வியடைந்துள்ளார். முன்னணி வீரரான முர்ரே இரண்டாவது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love