ஐபிஎல் போட்டியில் முக்கியஅணியான பெங்களூரு ரோயல் சலஞ்சர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவரும் வீரருமான டானியல் வெட்டோரி நீக்கப்பட்டுள்ளார். வெட்டோரிக்கு பதிலாக, முன்னாள் இந்திய பயிற்சியாளரும், தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரருமான கரி கிறிஸ்டன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 4 வருடங்களாக பெங்களூரு அணிக்கு பயிற்சியாளாக இருந்து வந்தநிலையில் கடந்த ஆண்டு ஐபிஎல்போட்டிக்கு பெங்களூரு அணிக்கு துடுப்பாட்ட பயிற்சியாளராக கொண்டு வரப்பட்ட கரி கிறிஸ்டன் அடுத்து ஆண்டு நடைபெறும்; ஐபிஎல் போட்டிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் 3 முறை இறுதிப் போட்டிவரை சென்ற பெங்களூருஅணி ஒருமுறை கூட சம்பியன் பட்டம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அணியில் முக்கியத்துவம் வாய்ந்த வீரர்கள் இருந்தும் அணியால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை என்பதனையடுத்து பயிற்சியாளர் மாற்றப்பட்டுள்ளார். கரி கிறிஸ்டன் இந்திய அணி 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்வதற்குத் துணை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது