ஒரே நாடு என்பதற்காக தமிழ் மக்களிடம் இதுவரை இணக்கப்பாடு இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளதாக தெற்கின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் புதிய அரசியலமைப்பின் ஊடாக, தமிழ் மக்களை ஒரு வழிக்கு கொண்டு வர வேண்டும் என, புதிய அரசியலமைப்பு மற்றும் 20வது சீர்திருத்தம் சம்பந்தமாக காலியில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளதாக அந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. சிறுபான்மை மக்களின் கருத்துக்களுக்கு இடமளிக்காமையின் காரணமாக யுத்தம் ஒன்று ஏற்பட்டதாக கூறிய சுமந்திரன், நாட்டுக்கு சமஷ்டி முறை தேவையில்லை என்றும் தற்போது இருக்கின்ற மாகாண சபை முறையில் சிறு மாற்றம் செய்யப்படுமானால் அதனை ஏற்றுக் கொள்வதற்கு தமது மக்கள் தயார் என்றும் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமஷ்டி முறை அவசியம் இல்லை மாகாண சபை முறையில் மாற்றம் செய்தால் போதும் என்கிறாரா சுமந்திரன்?
173
Spread the love