சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வாசலை அண்மித்த வீதி ஓரத்தில் வெடிகுண்டு திரி வெளியே தெரியும்படி, பேப்பரில் சுற்றப்பட்ட ஒரு பொதி காணப்பட்டுள்ளது. இதனை அவதானித்த பொதுமக்கள் காவற்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மோப்பநாயுடன் சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் பொதியைப் பிரித்து ஆய்வு செய்தனர். அதில் பாறைகளை தகர்க்க பயன்படுத்த கூடிய டெட்டனேட்டர் மருந்து குச்சிகள் மற்றும் பட்டாசு திரிகள் இருப்பது தெரியவந்தது.
மருத்துவமனை வாசலில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு, வெடிபொருட்களை வீசிச்சென்றது யார் என பூக்கடை காவற்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை வாசலில் வெடிப்பொருட்கள் கிடந்த சம்பவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.