176
கிரேக்கத்தின் மத்திய பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கிரீஸின் மத்தியப் பகுதியில் உள்ள கார்திட்சாவில் 25 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் திரிகலா மற்றும் லரிசா ஆகிய நகரங்களிலும் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்வை என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love