185
மியன்மாரின் யங்கூன் கடற்பகுதியில் சந்தேகத்திற்குரிய பெரிய துருப்பிடித்த கப்பல் ஒன்று நின்று கொண்டிருந்ததை அவதானித்த அப்பகுதி மீனவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்ததனையடுத்து , அதில் ஏதேனும் துப்பு கிடைக்குமா என்பது தொடர்பில் தேடுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றது.
சாம் ரடுலங்கி பிபி 1600 (Sam Ratulangi PB 1600) என்று பெயர் எழுதப்பட்டிருந்த அக்கப்பல் மியன்மாரின் தலைநகர் பகுதியில் உள்ள கடற்கரையில் மிதந்து கொண்டிருந்தமை இந்த வாரத்தின் தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த கப்பலில் மாலுமிகளோ அல்லது பொருட்களோ ஏதும் காணப்படவில்லை என யங்கூன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love