பாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சியை சேர்ந்த பெண் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் இருவருக்கு மரண தண்டனை விதித்து கராச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலின்போது, கராச்சித் தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற போது இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த பெண் தலைவரான ஜாஹ்ரா ஷகீத் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
இந்த கொலைக்கு எம்.கியூ.எம்.எல். என்ற அமைப்புத்தான் காரணம் என இம்ரான்கான் முறைப்பாடு வழங்கியதனைத் தொடர்ந்து அந்த அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இருவர் குற்றத்தினை ஒப்புக் கொண்டிருந்தனர்.
ஆனைதம்து விசாரணைகளும் நிறைவடைந்திலையில் நேற்றையதினம் தீர்ப்பினை வழங்கிய நீதிமன்றம் குறித்த கொலை தொடர்பில் இருவருக்கும் உள்ள தொடர்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்து மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது