தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக கட்டணம் அறவிடப்படுகின்ற நடைமுறை இன்று முதல் அமுலுக்கு வருவதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்தவகையில் 15 வயதையடைந்த , முதல் தடவையாக தேசிய அடையாள அட்டையை பெறுவோரிடமிருந்து 100 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது. அத்துடன், தேசிய அடையாள அட்டையை திருத்தி, அதன் இணைப்பிரதி ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக 250 ரூபா அறவிடப்படுவதுடன், காணாமல்போன அடையாள அட்டை ஒன்றின் இணைப் பிரதியை பெற்றுக்கொள்வதற்காக 500 ரூபாவும் அறவிடப்பட உள்ளது .
எனினும் வசதியின்மை காரணமாக கட்டணத்தை செலுத்த முடியாதோர் பிரதேச செயலாளரிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கட்டணம் செலுத்த தேவையில்லை என்ற உறுதியை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் எனவும் ஆட்பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது.