Home இலங்கை புதுடெல்லியில் மகிந்த, சம்பந்தன், மனோ, டக்ளஸ், ஹக்கீம், றிசாத்!

புதுடெல்லியில் மகிந்த, சம்பந்தன், மனோ, டக்ளஸ், ஹக்கீம், றிசாத்!

by admin


இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இரு தரப்பு சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புதுடெல்லியில் நிகழ்வொன்றில் கலந்துகொள்ளும் நிலையில் எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், மற்றும் சபாநாயகர் கருஜெயசூரிய உள்ளிட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதுடில்லியில் இந்திய அரசுடன் சந்திப்பில் கலந்து  கொள்கின்றனர்.

இதில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கூட்டு எதிரணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  உள்ளிட்டவர்களும் கலந்து கொள்கின்றனர்.

இதற்கமைய, எதிர்வரும் 9ஆம் நாள் தொடக்கம் 14ஆம் நாள் வரை, 10 பேர் கொண்ட பல கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு,  சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் புதுடெல்லியில் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் இ.ரா.சம்பந்தன், அவை முதல்வரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல,  ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.

இந்தியத் தலைவர்களுடன் இந்தக் குழு நடத்தவுள்ள பேச்சுக்களின் போது, இலங்கையின் பல்வேறு துறைகளுக்காக இந்தியாவின் ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடவுள்ளது. அத்துடன் புதிய அரசியலமைப்பு தொடர்பாகவும் இந்திய தரப்புக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.

இதேவேளை  இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,   பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரில் புதுடெல்லியில் வரும் 12ஆம் ஆம் திகதி நடைபெறும் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றவுள்ளார்.எதிர்வரும் 11ஆம் திகதி புதுடெல்லி செல்லவுள்ள மகிந்த ராஜபக்ச அங்கு 3 நாட்கள் தங்கியிருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்திலேயே பல கட்சி நாடாளுமன்றக் குழுவும் அங்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More