204
நடிகர் தனுஷ் இசைக் கலைஞராக தன்னுடைய புதிய பிரவேசத்தை தொடங்குகிறார். பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பெயர் பெற்றவர் நடிகர் தனுஷ். வடசென்னை திரைப்படத்தில் இவர் இசைப் பணி புரிந்துள்ளதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வட சென்னை திரைப்படம் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி வெளியாகவுள்ளது. அண்மையில் வெளியான வடசென்னை முன்னோட்டம் கவனத்தை ஈர்த்துள்ளது. மூன்றாவது முறையாக வெற்றிமாறன் தனுஷ் இணைந்து பணியாற்றுகின்றமை காரணமாக திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் டுவிட் மூலம் தனுஷ் இப்படத்தில் நடிப்புடன் இசையிலும் பணிபுரிந்திருப்பதாக கூறியுள்ளார். அத்துடன் ‘வடசென்னை தொடர்பாக அப்டேட் கொடுங்கள் என நிறைய மெசேஜ்கள் வந்துகொண்டே இருக்கிறது. மிகச் சிறப்பான, பயனுள்ள பல விஷயங்கள் அடங்கிய ஒரு ஆல்பத்தை உருவாக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம். மிக விரைவில் பாடல் வெளியீட்டு தேதியை அறிவிப்போம். இசைக்கலைஞர் தனுஷின் பங்கும் இதில் சேர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Spread the love