இந்தோனேஷியாவின் ஜகார்த்தா, பாலேம்பங் ஆகிய நகரங்களில் கடந்த 15 நாட்களாக நடைபெற்ற 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவுற்றுள்ளது. இந்தப் போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.
பதக்கப்பட்டியலில் 132 தங்கம், 92 வெள்ளி, 65 வெண்கலங்களுடன் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஜப்பான் 2-வது இடத்தையும், தென் கொரியா 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. போட்டியை நடத்திய இந்தோனேஷியா 31 தங்கம் உள்பட 98 பதக்கங்களை வென்றுள்ளது.
நேற்று மாலை நிறைவு விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், இசை, பாடல் நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.
அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டி 2022-ல் ஹாங்சவ்வில் நடைபெறவுள்ள நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான கொடி, ஹாங்சவ் நகர மேயர் ஜு லி யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது