பிரேசிலில் 200 ஆண்டுகால பழமையான தேசிய அருங்காட்சியகத்தில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக பல லட்சம் பெறுமதியான பொருட்கள் அழிவடைந்துள்ளன. பிரேசிலின் தலைநகர் ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள இந்த மிகவும் பழமையான அருங்காட்சியகத்தில் அந்நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் உள்ளிட்ட வெளிநாட்டுக் கலைப்பொருட்கள் என 2 கோடிக்கும் அதிகமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தில் நேற்று ஞாயிறு இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தகவலறிந் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். அருங்காட்சியகம் மூடப்பட்ட சிறிது நேரத்தில் தீப்பற்றியிருக்கலாம் எனவும், யாரும் கவனிக்காததால் கட்டிடம் முழுவதும் தீ பரவி எரிந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அழந்துள்ள நிலையில் காயமோ உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
பண்டைய காலத்தில் போர்த்துக்கீசிய அரச குடும்பத்தின் மாளிகையாக இருந்த இந்த அருங்காட்சிகத்தின் 200 ஆண்டு நிறைவு விழா இந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தின் பாழடைந்த நிலை மற்றும் அரசாங்கத்தின் நிதி குறைப்பு குறித்து ஊழியர்கள் தங்கள் கவலைகளை ஏற்கனவே தெரிவித்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.