குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய நீதி மன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 03-09-2018 காலை ஒன்பது முப்பது மணிக்கு இடம்பெற்றுள்ளது. பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் மற்றும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசிரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், மற்றும் நீதிபதிகள் சட்டத்தரணிகள் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்
நீதி அமைச்சின் 4500 இலட்சம் ரூபா செலவில் மூன்று மாடிகளை கொண்ட புதிய நீதி மன்றக் கட்டடத் தொகுதிக்கே அடிக்கல் நாட்டப்பட்டது. நீதவான் நீதின்றம், மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என்பவற்றுடன் நீதிபதிகளுக்கான விடுதிகள் இரண்டும் உள்ளடங்கிய வகையில் புதிய நீதி மன்றக் கட்டடத் தொகுதி அமையவுள்ளது. 540 நாட்களில் கட்டடப் பணிகள் நிறைவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் மற்றும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசிரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோருடன் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், சட்டத்தரணிகள், பிரதி பொலீஸ் மா அதிபர், கிளிநொச்சி மாவட்ட இராணுவ தளபதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனர்.