மியன்மாரின் பாதுகாப்பு ரகசியங்களை திருடியதாக ரொய்ட்டர்ஸ்; நிறுவனத்தை சேர்ந்த இரு செய்தியாளர்களுக்கு 7 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் மீது ஆட்சியாளர்கள் மேற்கொண்ட வன்முறைகள் காரணமாக சுமார் 20 ஆயிரம் போட கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சுமத்தியுள்ள நிலைவயில் சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேசுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
இந்தநிலையில் , மியன்மாரில் ; பாதுகாப்புக்குரிய ரகசியத்தை திருடியதாக ரொய்ட்டர்ஸ்; செய்தி நிறுவனத்தை சேர்ந்த இரு செய்தியாளர்கள் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டிருந்தனர். ரக்கைன் மாநிலத்தின் கிராமம் ஒன்றில் சட்டவிரோதமாக பத்து பேரை சுட்டுக் கொன்றது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றபோது, இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைதான நிருபர்கள் மீதான தேசத்துரோக வழக்கு தொடர்பில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி குறித்த இரு செய்தியாளர்களும் நாட்டின் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் வகையில் முக்கிய ரகசியத்தை திருடியுள்ளமை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் இவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறேன் என உத்தரவிட்டுள்ளார்.
அவர்களை விடுதலை செய்யக்கோரி மியன்மாரின் பல பகுதிகளில் மனித உரிமை ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.