நியூயார்க்கில் நடைபெற்று வருகின்ற இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ்
தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் காலிறுதிக்குள முன்னேறியுள்ளார். நோவக் ஜோகோவிக்கும், போர்த்துக்கல்லின் ஜோ சவுசாவுக்குமிடையில் இடம்பெற்ற போட்டியில் ஜோகோவிச் 6-3 6-4 6-3 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதிப் போட்டியில் ஜோகோவிச் ரோஜர் பெடரருடன் போட்டியிடவுள்ளார்.
மேலும் ஸ்பெயினின் ரபேல் நடால் ஜோர்ஜியாவின் நிக்கோலஸ் பஸிலஷ்விலியை 6-3, 6-3, 6-7 (6-8), 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதிப போட்டியில் நடால், ஒஸ்ரியாவின் டொமினிக் தியமுடன் போட்டியிடவுள்ளார்.
அதேவேளை மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-0, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் எஸ்டோனியாவின் கயா கனேபியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதியில் அவர், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவுடன் போட்டியிடவுள்ளார்.