167
தென்னாபிரிக்காவில் ஆயுத கிடங்கொன்றில் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகரான கேப் டவுனில் உள்ள சமர்செட் நகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்த ஆயுத கிடங்கில் கன ரக ஆயுதங்கள், உட்பட ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில், இந்த கிடங்கு திடீரென வெடித்துச் சிதறியயதில் விபத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெடி விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Spread the love