மியன்மாரில் நேற்றையதினம் 7 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரொய்ட்டர்ஸ்; நிறுவனத்தின் இரு செய்தியாளர்களையும் விடுதலை செய்யுமாறு அந்நாட்டு அரசினை ஐ.நா. சபையின் மனித உரிமைகளுக்கான அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மியன்மாரின் பாதுகாப்பு ரகசியங்களை திருடியதாக குறித்த இரு செய்தியாளர்களுக்கும் இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் மீது ஆட்சியாளர்கள் மேற்கொண்ட வன்முறைகள் காரணமாக சுமார் 20 ஆயிரம் போட கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சுமத்தியுள்ள நிலைவயில் சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேசுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
இந்தநிலையில் ரொய்ட்டர்ஸ்; செய்தி நிறுவனத்தை சேர்ந்த இரு செய்தியாளர்கள் கடந்த டிசம்பர் மாதம் ரக்கைன் மாநிலத்தின் கிராமம் ஒன்றில் சட்டவிரோதமாக பத்து பேரை சுட்டுக் கொன்றமை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றபோது, கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு செய்தியாளர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு மியான்மர் அரசை ஐ.நா. சபையின் மனித உரிமைகளுக்கான அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அமைப்பின் ஆணையாளர் மிச்சேல் பச்செலெட்) Michelle Bachelet ) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணை முறைகளுக்கான சர்வதேச அளவீடுகளை மீறிய வகையில் அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலமாக மியான்மரில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களும் அச்சமின்றி செயல்பட முடியாது என்னும் செய்தியை இந்த வழக்கின் தீர்ப்பு வெளிப்படுத்தி உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.