192
ஜேர்மனியில் சட்டவிரோதமாகக் கருதப்படும் ஹிட்லரின் மரியாதை முறையை வெளிப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இரண்டு காவல்துறையினர் மீது, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜேர்மனியின் தெற்கு மாநிலமான பவேரியாவிலேயே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நாஸிக்களின் வன்முறை காரணமாகப் பாதிக்கப்பட்ட ஜேர்மனியில், அந்நாட்டு அரசியலமைப்புபடி, நாஸி அடையாளங்களை வெளிப்படுத்துவது குற்றமாகும். குடியேற்றவாசிகள், இனவாதக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஜேர்மனியின் அரசியல் கலந்துரையாடல் காணப்படும் நிலையில், இவ்விடயம் மேலும் பிளவுகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது
Spread the love