தூத்துக்குடியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருது தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பயணம் செய்த போது தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவரின் மகளான 23 வயதான சோபியா என்ற பெண், பாஜக ஒழிக என கோஷமிட்டார்.
இதையடுத்து, தமிழிசைக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதனையடுத்து அவருக்கெதிராக தமிழிசை சவுந்தரராஜன் விமான நிலைய அதிகாரிகளிடம் முறைப்பாடு வழங்கியதயைடுத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
கனடாவில் படித்து வரும் சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டநிலையில், சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சோபியா கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை , பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்ட 10 பேர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக சோபியாவின் தந்தை காவல்துறையில் முறை;பபாடு செய்துள்ளார்.