கடந்த அரசாங்கத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த போது, லங்கா சதொச நிறுவனத்தால் கரம் போர்ட் கொள்வனவு செய்த போது சுமார் 53 மில்லியன் ரூபா நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி மஹிந்தானந்த அளுத்கமகேக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை கோட்டை நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதிக்கு ஒத்திவைத்தது.
இன்றைய விசாரணையின் போது, சந்தேகநபருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவதா அல்லது விஷேட நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவதா என ஆராய்ந்து கொண்டிருப்பதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மன்றில் தெரிவித்தது. அதன்படி அவருக்கு எதிரான வழக்கு நவம்பர் மாதம் 16ம் திகதிக்கு ஒத்தி வைப்பதாகவும், அன்றைய தினம் முன்னேற்ற அறிக்கையை சமர்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.