ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள இஷிகாவா பகுதியில் இன்று கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு வேகமான ஜெபி என்னும் புயல் வீசியதனால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 150க்கும் மேற்பட்டேமார் காயமடைந்துள்ளனர். மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வீசியமையினால் hல வீடுகளின் கூரைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது
மேலும் பல பல பகுதிகளில் பலத்த மழையும் பெய்து வருவதனால் பாடசாலைகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதனால் சுமார் 10 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளதுடன் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் சுமார் 12 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.