சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்களை இலக்குவைத்து இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலை நடுவானில் இடைமறித்து தாக்கி அழித்ததாக சிரியா அறிவித்துள்ளது . உள்நாட்டுப்போர் நடைபெற்று வரும் சிரியாவில் போராளிகளுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கிவரும் நிலையில் அரசுக்கு ரஸ்யா மற்றும் ஈரான் நாடுகள் ஆதரவாக உள்ளன.
இந்நிலையில், சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்களை இலக்குவைத்து இஸ்ரேல் நடத்திய ஏவுகணைகளை நடுவானிலேயே தமது ராணுவம் இடைமறித்து தாக்கி அழித்துள்ளதாக சிரியா தெரிவித்துள்ளது. டார்டோஸ் மற்றும் ஹமா பகுதிகளில் உள்ள ஈரானுக்கு சொந்தமான ராணுவ தளங்கள் மீதே இஸ்ரேல் போர் விமானங்கள் திடீர் என ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும் அதில் 5 ஏவுகணைகளை நடுவானிலேயே இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் ஹமா பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அருகே இரண்டு ஏவுகணைகள் விழுந்து வெடித்ததில் 3 ராணுவ வீரர்கள் பலியானதாகவும், 23 பேர் படுகாயம் அடைந்ததாகவும் சிரியா தெரிவித்திருந்தது
எனனும் தங்களது ராணுவம் எவ்வித தாக்குதலிலும் ஈடுபடவில்லை என இஸ்ரேல் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது